Sri Ramana Stuthi Panchakam(Tamil)

Rs.5/-

Language Tamil.1910-11 ஆண்டு காலத்தில், பகவான் ரமணர் மோன மூர்த்தியாக விரூபாக்ஷ குகையில் வசித்த காலத்தில் சத்யமங்கலம் வேங்கடராமன் என்ற பெயர்தாங்கியவர் ஒரே ஒருமுறை வந்திருந்தார். மற்ற அடியார்களுடன் 5-6 நாட்களே தங்கியிருந்த அவர், வெளியுலகிற்கு இன்னமும் அறிமுகமாகாதிருந்த அம்மோன முனிவராம் ரமணரைப் பற்றி நெஞ்சை நெகிழச் செய்யும் இவ்வைந்து துதிப் பாடல்கள் இயற்றினார்.

தனது பரமாத்ம தத்துவத்தை உலகறியச் செய்து ஜீவர்களை ஈடேற்ற வேண்டி மதுரையிலிருந்து அழைத்து வந்த இம்முனிவன் ரமணன், மோனத்திலேயே இருந்து விட்டால் என் செய்வது என அருணாசலேசன் சந்தேகித்தான் போலும்!

மானிட உருக்கொண்டு மோன முனிவரைப் பாடிவிட்டு, இனிமேலாகிலும் என்னைப் பாடுவாயா! என்று அருணாசலேசன் பகவான் ரமணரைக் கேட்பதுபோல் அமைந்துள்ளது இந்த ஸ்துதி பஞ்சகம் உருவான வரலாறு என்பது குஞ்சு சுவாமிகள் அடிக்கடி தனது சம்பாஷணைகளில் குறிப்பிடுவதுண்டு.

பக்கங்கள் 31

Sold Out
Copyright © 2017 Ramana Ashram Bookstall. Powered by Zen Cart - Design by AFZ Design