ஈசுவரன்:-
37. நானே பூமியில் தேஜோ ரூபங்கொண்டு ஸித்தியின் பொருட்டு (மோக்ஷ ஸித்தி யளிப்பதற்காக) அருணாசலம் என்ற பெயருடன் விளங்குகின்றேன்.
38. இது (இம்மலை) கொடிய பாவக்குவியலை எல்லா வுலகங்களினின்றும் (அதாவது எல்லா வுலகங்களிலுமுள்ள ஜீவர்களிடமிருந்தும்) நீக்குவதாலும், இதைப் பார்த்த மாத்திரத்தாலேயே ருணம் (பந்தம்) ஒன்றும் இல்லாமற் போவதாலும் இது அருணாசலம் எனப்படுகிறது.
40. எனது அம்சத்தினின்றும் உண்டானவர்களும், பரஸ்பரம் யுத்தம் செய்து கொண்டிருந்தவர்களுமான பிரம்ம-விஷ்ணுக்களின் மோஹத்தைப் போக்குவதற்காக நான் முன்னொரு காலத்தில் தேஜோ ரூபமாய்த் தோன்றினேன்.
43. அவர்கள் இருவரும் மேலும் வேண்டிக் கொண்டதால், தேஜோ ரூபமான நான், அருணாசலம் என்ற பெயருடன் ஸ்தாவர லிங்கமா யானேன்.
ஸ்காந்த மஹாபுராணம் (அருணாசல மாஹாத்மியம்)
தன் மனதை அண்ணாமலை மீது பதித்து கிரிவலம் செய்வதே ஒருவன் தனது வாழ்நாளில் செய்யக்கூடிய மிகவும் ஆன்மிக லாபம் அளிக்கக்கூடிய செயலெனலாம். அண்ணாமலையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களையும் ஈர்க்கும் அதன் ஆற்றல் தொன்றுதொட்டே பிரஸித்தம். அதனருகிலிருந்தாலேயே அலைபாயும் மனது அமைதியுறும். அதைத் தியானிப்பவர் முக்தியுறுவர். ஆன்மிக விடுதலையை நாடும் ஸாதகர்களுக்கு இந்த வீடியோ ஸமர்ப்பிக்கப்படுகிறது.