Kadithangal I&II (Tamil)

  1. Home
  2. Books in Tamil
  3. Kadithangal I&II (Tamil)

Kadithangal I&II (Tamil)

220.00

236 in stock

SKU: 2050 Category:

Description

சூரிநாகம்மா என்ற தெலுங்கு பக்தை வெகுநாள் ரமணாச்ரமத்தில் வசித்து, ஸ்ரீ ரமண பகவானுடைய அனுக்ரஹம் பெற்றவர். அவர் ஆச்ரமத்தில் தினந்தோறும் நடந்த சம்பவங்களையும், பக்தர்களுக்கு பகவான் அருளிய உபதேசங்களையும், கடிதங்களாக எழுதி ஸ்ரீ பகவான் பார்வையிட்ட பின்னர், தன் சகோதரருக்கு அனுப்பி வந்தார். ‘ரமணாச்ரம லேகலு’ என்னும் பெயரில் தெலுங்கில் இந்தக் கடிதங்கள் புத்தக உருவில் வெளியாகி இருக்கின்றன. இந்நூல் ஆங்கிலத்திலும் மற்றும் சில இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதங்களைப் படிக்கும்பொழுது, நாம் ஆச்ரமத்தில் ஸ்ரீரமண பகவானுக்கருகில் இருந்து, அந்தச் சம்பவங்களில் பங்கு கொண்டாற் போலவும், பகவான் விதேக முக்தி அடைந்திருந்தாலும், அவர் ஸஜீவ மூர்த்தியாக அன்போடு நமக்குக் காட்சி தரும் அனுபவமும் உண்டாகின்றன. ஆந்திர மொழியிலிருக்கும் இந்த ஞானப் பெட்டகத்தைத் தமிழாக்கி பக்த ஜனங்களுக்கு ஸ்ரீ விசாகா அளித்துள்ளார்.

ஆத்ம விசாரத்திற்கு அனுகூலமான வழியைக் காட்டும் இந்த நூலைப் படித்து, ஸ்ரீ ரமண பகவான் அனுக்ரஹத்தைப் பக்தர்களெல்லோரும் பெறுவார்களாக!

பக்கங்கள் xiv+686

Additional information

Weight 0.85 kg
Menu