Prani Mithra Bhagavan Part III(Tamil)

  1. Home
  2. Books in Tamil
  3. Prani Mithra Bhagavan Part III(Tamil)

Prani Mithra Bhagavan Part III(Tamil)

40.00

79 in stock

SKU: 2094 Category:

Description

Language Tamil. “பிராணிமித்திர பகவான் ரமண”ரின் இம்மூன்றாம் இறுதிப் பாகத்தில் வனவிலங்குகள், பறவைகள், நாய், பூனை, அணில், ஆடு போன்ற பதினைந்து பிராணி வர்க்கங்கள், மற்றும் தாவர இனமும் ஸ்ரீ பகவானது கருணைக்குப் பாத்திரமான வரலாறுகள் விளக்கப் பட்டுள்ளன.

ஸ்ரீ ரமணாச்ரமத்தில் அமைந்துள்ள மான், காகம், நாய், மயில் இவற்றின் சமாதிக் கட்டிடங்கள்,
ஸ்ரீ பகவானது கருணை, அனைத்து உயிர்களையும் அவர் அரவணைத்துச் செல்வதை நமக்குப் பறைசாற்றுகின்றன.
பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களை ஆச்ரமத்தில் யாரேனும் துன்புறுத்தினால் “அவர்கள் வா
ம் இடத்திற்கல்லவா நாம் வந்துள்ளோம்; அவர்களைத் துன்புறுத்த நமக்கு உரிமை ஏது?” என்று ஸ்ரீ பகவான் கடிந்து கொள்வார். ‘ஐயோ பாம்பு!’ என்று பயந்து அதைத் துன்புறுத்த நினைத்தால் அவையும் ‘ஐயோ மனிதன்!’ என்று பயந்து தற்காப்பிற்காக நம்மைத் தாக்கத் தயாராகின்றன என்பது போன்ற உண்மைகளை நாம் பிராணி மித்திர பகவானிடமிருந்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.

தன்னை நாடி வந்த அரசர்களுக்குக்கூட பிரத்தியேக தரிசன ஏற்பாடுகளை அனுமதிக்காத பகவான், ஒரு சொறி பிடித்த சுவானத்திற்குத் தனிமையில் தனது உடலையே சில நிமிடங்கள் ஒப்படைத்தார்.

முரட்டு அணில்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஸ்ரீ பகவானிடம் மன்னிப்பு கேட்டன. விரிசல் அடைந்த முட்டையைக்கூட பகவான் சரிசெய்து குஞ்சு பொரிக்கச் செய்தார். பிராணிகளுக்குத் தேவையானபோது பிராணி வைத்தியராகவும் தொண்டாற்றியுள்ளார்.

இப்படி ஸ்ரீ பகவான் பார்வைக்கு ஆட்பட்ட பிராணிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். எ
தி வைக்கப்பட்டுள்ள இதுபோன்ற சம்பவங்களேயன்றி எ
தப்படாமல் விடுபட்டவை எவ்வளவோ உள்ளன என்று ஸ்ரீ பகவான் தனது மலைவாச காலத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பிராணிகளிடம் ஸ்ரீ பகவான் காட்டிய கருணா விலாசத்தை ஓதியுணர்ந்து நாமும் அவரது கருணைக்குப் பாத்திரமாவோமாக!

பக்கங்கள் 69

Additional information

Weight 0.22 kg
Menu