Ramana Amudhu – Tamil

  1. Home
  2. Books in Tamil
  3. Ramana Amudhu – Tamil

Ramana Amudhu – Tamil

70.00

245 in stock

SKU: 2126 Category:

Description

இரமண அமுது

ஸ்ரீ பகவானை அறியாத காலத்தில்‌ அவரின்‌ அமுத மொழிகளை குஞ்சு சுவாமிகள்‌ அண்ணாமலை ஸ்வாமிகள்‌ ராமசாமிப்‌ பிள்ளை அவர்கள்‌ வா யிலாக கேட்கும்போது – அடடா! அடேயப்பா!
பகவான்‌ எப்படி எல்லாம்‌ சொல்லி இருக்கிறார்‌ ன்று ஆச்சரியத்தோடு உடம்பெல்லாம்‌ கூச்செரியும்‌.

பின்நாளில்‌ பகவானின்‌ சரிதையையும்‌ உபதேச மொழிகளையும்‌ வாசிக்கும்போது- பளீர்பளீர்‌ என்று அறைந்ததுபோலும்‌ – மின்சாரத்‌ தாக்குதல்போல தூக்கிப்‌ போடுவதும்‌ அடிக்கடி நிகழும்‌. அப்படி நிகழ்வுகளை என்னுள்‌ ஏற்படுத்திய அந்த விஷயங்களை பகவானை அண்டி வந்தவர்களுக்கும்‌ தெரியப்படுத்த வேண்டும்‌ என்ற உந்துதலில்‌ நான்‌ குறித்து வைத்த பகுதிகளைத்‌ தொகுத்து –

இடையிடையே என்னுடைய அபிப்பிராயங்களையும்‌ எழுதி வந்ததே – ஒரு நூலாக இப்போது வெளிவருகிறது.

இதை வாசிக்கும்போது எனக்குள்‌ ஏற்பட்ட உணர்வு மற்றவர்களுக்கும்‌ வருமா? என்பது எனக்குத்‌ தெரியாது!

ஆனால்‌, அப்படி வர வேண்டும்‌ என்ற எதிர்பார்ப்பு – அதிகமாகவே எனக்கு இருக்கிறது. எல்லோரின்‌ வேண்டுகோளையும்‌ ஏற்று நிறைவேற்றும்‌ பகவத்‌ அருள்‌ இவ்வெளியேனின்‌ ஆசையையும்‌ நிறைவேற்றித்‌ தரும்‌ என்று நம்புகிறேன்‌!

பகவதருள்‌ துணைநிற்க/
– இளையராஜா

Additional information

Weight 0.15 kg
Menu