Sri Arunachala Mahatmyam (Tamil – Ebook)

  1. Home
  2. eBooks - Tamil
  3. Sri Arunachala Mahatmyam (Tamil – Ebook)

Sri Arunachala Mahatmyam (Tamil – Ebook)

50.00

480 in stock

SKU: 16014 Category:

Description

நினைக்க முக்தி நல்கும் தேஜோ லிங்க சுயம்புவாய் விளங்கும் ஸ்ரீ அருணாசலம் என்னும் உத்தமோத்தமத் தலத்தின்கண் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே யன்ன பகவான்
ஸ்ரீ ரமணர் திருமேனி கொண்டு விளங்கிய போது, தமது அடியார்கள் அனைவரும் சிவ பக்தியிலும், சிறப்பாக ஸ்ரீ அருணாசல பக்தியிலும் ஈடுபடும் பொருட்டுக் காட்டியருளிய உபாயங்கள் பலவாம். அவைகளுள் வடமொழிப் புராணங்களான,

1) ஸ்காந்த மஹாபுராணத்தில் முதலாவதான மஹேசுவர கண்டத்தின் மூன்றாவது பாகமான ஸ்ரீ அருணாசல மாஹாத்மியம்,

2) சிவரஹஸ்யத்தின் நவம அம்சத்தில் உபமன்யு சிவபக்த விலாஸ மத்ய பாகத்தில், ஸ்ரீ ஞானசம்பந்தர் சரித்திரத்திலுள்ள ஸ்ரீ அருணாசல மஹிமை,

3) சிவமஹாபுராணம் முதலாவதான வித்யேச்வர ஸம்ஹிதையில் உள்ள ஸ்ரீ அருணாசல மஹாதத்துவம்,

4) ஸ்காந்தோப புராணம், கே்ஷத்ர கண்டத்திலுள்ள ஸ்ரீ அருணாசல தீபோத்ஸவ மாஹாத்மியம்,

5) சிவமஹாபுராணத்தில் வித்யாஸார ஸம்ஹிதையில் உள்ள அருணாசல கே்ஷத்திரத்தில் அன்னதான பெருமை,

ஆகிய இவ்வைந்து மூலநூல்களிலும் அமைந்து கிடந்த ஸ்ரீ அருணாசல மாஹாத்மியத்திருந்து தேர்ந்து, சேகரித்துத் திரட்டிய 2659 சுலோகங்களை ஸ்ரீ அருணாசல மாஹாத்மியம் எனத் தொகுத்து, அவற்றை மூன்று நோட்டுப் புத்தகங்களில் ஸம்ஸ்கிருதத்தில் தமது அருட்கரங்களாலேயே பிரதிசெய்து வைத்துள்ளதும் ஒன்றாகும். அந்த மூன்று நோட்டுப் புத்தகங்களும் இன்றும் ஸ்ரீ ரமணாச்ரமத்திற் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது ஸ்ரீ ரமண பகவான் தமதுள்ளத்தில் ஸ்ரீ அருணாசல மாஹாத்மியத்திற்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தைச் செவ்வனே வெளிப்படுத்துவதாகும்.

ஸ்ரீ பகவானாற் சேகரிக்கப்பட்ட இவ் வருணாசல மாஹாத்மியப் பகுதியின் முக்கியத்துவத்தை நன்கறிந்திருந்த ஸ்ரீ முனகால வேங்கடராமையா என்னும் ரமண பக்தர் அதைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அது ஸ்ரீ ரமணாச்ரமத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஈசுவரன்:-

37. நானே பூமியில் தேஜோ ரூபங்கொண்டு ஸித்தியின் பொருட்டு (மோக்ஷ ஸித்தி யளிப்பதற்காக) அருணாசலம் என்ற பெயருடன் விளங்குகின்றேன்.

38. இது (இம்மலை) கொடிய பாவக் குவியலை எல்லா வுலகங்களினின்றும் (அதாவது எல்லா வுலகங்களிலுமுள்ள ஜீவர்களிடமிருந்தும்) நீக்குவதாலும், இதைப் பார்த்த மாத்திரத்தாலேயே ருணம் (பந்தம்) ஒன்றும் இல்லாமற் போவதாலும் இது அருணாசலம் எனப்படுகிறது.

40. எனது அம்சத்தினின்றும் உண்டானவர்களும், பரஸ்பரம் யுத்தம் செய்து கொண்டிருந்தவர்களுமான பிரம்ம-விஷ்ணுக்களின் மோஹத்தைப் போக்குவதற்காக நான் முன்னொரு காலத்தில் தேஜோ ரூபமாய்த் தோன்றினேன்.

43. அவர்கள் இருவரும் மேலும் வேண்டிக் கொண்டதால், தேஜோ ரூபமான நான், அருணாசலம் என்ற பெயருடன் ஸ்தாவர லிங்கமா யானேன். (ஸ்காந்த மஹாபுராணம்)

பக்கங்கள் 238+xxx

Menu