Viveka Chudamani(Tamil)

  1. Home
  2. Books in Tamil
  3. Viveka Chudamani(Tamil)

Viveka Chudamani(Tamil)

150.00

478 in stock

SKU: 2108 Category:

Description

Language Tamil.விவேக சூடாமணி

மதுரையில் மரணானுபவத்தின்மூலம் ஆத்ம நிஷ்டையில் நிலைபெற்றவர் பகவான் ரமணர். இவர் குருமூர்த்தம், விருபாக்ஷகுகை வாசகாலங்களில் அன்பர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கு யோகவாசிஷ்டம், விவேகசூடாமணி முதலிய நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்கம் அளித்து வந்தனர்.

விரிவான ரமணோபதேசமாகிய விசார சங்கிரம் உருவாகக் காரணமான கம்பீரம் சேஷய்யருக்கென பகவான் ரமணர் விவேக சூடாமணியையும் உரைநடை வடிவில் 1904 ஆண்டு காலத்தில் உருவாக்கினார். பகவானது முக்கிய உபதேசமாகிய “நான் யார்” – சிறு நூலுக்கு இந்நூல் விரிவுரைபோல் அமைந்துள்ளதை அழ்ந்து படித்துணரலாம்.

ஆதிசங்கரரின் 581 சம்ஸ்கிருத விவேக சூடாமணி சுலோகங்களை உலகநாத சுவாமிகள் 662 விருத்தப்பாக்களான தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இத்தமிழ்ப் பாடல்களையும் பகவானது நூல்திரட்டில் இடம்பெற்றுள்ள வசன நடையையும் ஒப்பு நோக்கி ஆழ்ந்து படித்து மனனம் செய்ய உதவியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மூல நூலாசிரியரான ஆதிசங்கரரின் வாழ்க்கை விளக்கச் சித்திரங்களும் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.

விஷயத் தெளிவிற்கு உதவும் வகையில் இந்நூல் உபதேசத் தொடக்கம்; அனாத்ம; ஆத்ம; பந்த; மோக்ஷ; பஞ்சகோச; ஜீவப்ரம்ம; ஐக்ய; அனுபவ; சாதன; ஜீவன்முக்த இயல்புகள் என தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கங்கள் 268

Additional information

Weight 0.5 kg
Menu