ஸ்ரீ ரமண மகரிஷிகள் சொன்ன ஆன்மிகக் கதைகள்

  1. Home
  2. Books in Tamil
  3. ஸ்ரீ ரமண மகரிஷிகள் சொன்ன ஆன்மிகக் கதைகள்

ஸ்ரீ ரமண மகரிஷிகள் சொன்ன ஆன்மிகக் கதைகள்

130.00

 

982 in stock

SKU: 2130 Category:

Description

ஸ்ரீ ரமண மகரிஷிகள் சொன்ன ஆன்மிகக் கதைகள்

சம்சார நோய்க்கு, சக்தி வாய்ந்த அருமருந்தாக வேதங்களும்‌ உபநிடதங்களும்‌ விளங்கும்‌ அதே வேளையில்‌, ஆன்மிகக்‌ கதைகள்‌ ருசியான இனிப்புகளைப்‌ போன்றவை. அக்கதைகள்‌ உன்னதமான ஆன்மிக உண்மையின்‌ சுவையை நேரடியாகவும்‌ சிரமமின்றியும்‌ நமக்கு அளிக்கின்றன.

பகவான்‌ ஸ்ரீ ரமண மகரிஷி தமது பக்தர்களுக்கு தெய்வீக விருந்து அளித்த தலைமை சமையல்காரர்‌ ஆவார்‌. காலத்தால்‌ அழியாத உவமைகளும்‌, காவியக்‌ கதைகளும்‌ அவருடைய கிருபையான வார்த்தைகளாலும்‌, ஒப்பற்ற தத்ரூபமான நடிப்பினாலும்‌ ஜீவத்துவம்‌ பெற்றன.

“பகவான்‌ கதை சொல்ல ஆரம்பித்ததும்‌ — அக்கதையினை முன்னரே பலமுறை கேட்டிருந்தாலும்‌ — நாங்கள்‌ என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும்‌
அதை நிறுத்திவிட்டு மீண்டும்‌ அக்கதையைக்‌ கேட்க அவர்‌ பக்கம்‌ ஓடிவிடுவோம்‌. அந்தக்‌ கதைகளின்‌ ஈர்ப்புச்‌ சக்தி அப்படிப்பட்டது” என்று பகவானது அடியார்‌ குஞ்சுசுவாமிகள்‌ சொல்லுவார்‌.

நமது அன்பிற்குரிய சத்குரு, தமது வாக்கினால்‌ மறுபடியும்‌ சொன்ன இந்த உன்னதமான ஆன்மிகக்‌ கதைகள்‌, சாதகர்களுக்கு இனிய விருந்தாகவும்‌, ஆன்மிக வழியில்‌ உத்வேகமும்‌ வழிகாட்டுதலும்‌ நல்கி, ஆன்மலாபம்‌ அளிக்கும்‌ என்பது திண்ணம்‌.

 

Additional information

Weight 0.420 kg
Menu